பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


பூர்த்தி செய்: கூன் வந்தான். கூன் __________ செவிடு வந்தது. செவிடு _______

6. பால்

ஆண்பால்

   அண்ணன், தம்பி, வேலன், அவன் - இப்பெயர்ச் சொற்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆண்மகனைக் குறிக்கின்றது. ஆகவே இது ஆண் பால்.
 “ஒரு ஆண்மகனைக் குறிப்பதே ஆண் பாலாம்"

பெண் பால்

   அக்காள், அரசி, ஒளவை, அவள் - இப்பெயர்ச் சொற்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெண்ணைக் குறிக்கின்றது. ஆகவே இது பெண் பால்.

"ஒரு பெண்ணைக் குறிப்பதே பெண் பாலாம்".

பலர்பால் அரசர், புலவர், அவர்- இப் பெயர்ச் சொற் களில் ஒவ்வொன்றும் பல ஆண்களைக் குறிக்கின்றது. ஆகவே இவை பலர் பால்.