பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

ஒன்றன்பால்

மரம், மாடு, அது - இப்பெயர்ச் சொற்களில் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கிறது. இவ்வாறு குறிப்பது ஒன்றன்பால்.

பலவின் பால்

மரங்கள், மாடுகள், அவை - இப்பெயர்ச் சொற்களில் ஒவ்வொன்றும் பல பொருளைக் குறித்தது. இவ்வாறு குறிப்பது பலவின்பால்.

"ஒன்றன் பாலும் பலவின் பாலும் அ.:றிணைக்கு உரியனவாம்."

"பால் என்ருலும் பிரிவு என்பதே பொருளாம். இது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்று ஐந்து வகைப்படும்.'

சூத்திரம்:

"ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை
ஒன்றே பலவென்று இரு பாற்று அஃறிணை.”

 

பயிற்சி

1பால் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
2ஆண்பால் என்ருல் என்ன? உதாரணம் கொடு.
3பெண்பால் என்ருல் என்ன? உதாரணம் கொடு.
4பலர்பாலை உதாரணத்துடன் விளக்கு.
5ஒன்றன்பால் என்றால் என்ன?