பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

6பலவின் பால் என்றால் என்ன?
7பாரியும் ஓரியும் வள்ளல்கள். அவர்களது அவைக்களத்திற்கு ஒளவை சென்றாள். பாட்டுப் பாடினாள். பரிசுகள் பெற்றாள். அவைகளைக் கபிலர் பார்த்தார். சங்கவையும் அங்கவையும் பாரியை இழந்து வருந்தினர். அது கண்ட கபிலர் அவர்களைத் தேற்றினர். இவற்றிலுள்ள ஐம்பாற் பெயர்களைத் தனித்தனியே எடுத்து எழுது.
8மறுபால் எழுது:-
அரசன், குயத்தி, அது, அவர், அவன்.

ஆண்பால் பெண்பால் -மாறும் வகை

ஆண்பால் பெண்பால்
அரசன் அரசி
தலைவன் தலைவி

இவற்றுள் 'அன்' என்ற ஆண்பால் விகுதிக்குப் பதில் ‘இ’ என்ற விகுதி சேர, ஆண் பால் பெண் பாலாயிற்று.

“'அன்' விகுதி பெற்ற ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயராய் மாறும் பொழுது ‘இ’ விகுதி பெறும்.”