பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

 

பயிற்சி

1பயிற்சி எண் எத்தனை வகைப்படும்? எவை?
2ஒருமை என்றால் என்ன? உதாரணம் கொடு.
3பன்மை என்றால் என்ன? உதாரணம் எழுது.
4ஒருமைக்குரிய பால்கள் யாவை?
5பன்மைக்குரிய பால்கள் யாவை?
6உயர்திணைக்குரிய பால்கள் யாவை?
7அஃறிணைக்குரிய பால்கள் யாவை?
8நான் பத்துப் பழங்கள் வாங்கினேன். அவற்றில் ஒன்றை அணிலுக்கு அளித்தேன். அதைப் பார்த்துக் காகங்கள் என்னைச் சுற்றிப் பறந்தன. அவைகள் கா, கா வென்று கத்தின. கண்ணனும் காந்தாரியும் வந்தனர். புனிதவதியார் கற்பில் சிறந்தவர். பூம்பாவையும் அப்படியே. ஆகவே அவர்கள் உலகினரால்
போற்றப்பட்டனர். இவற்றிலுள்ள ஒருமை, பன்மை குறிக்கும் சொற்களை ஐம்பால் வகையில் பிரித்து எழுது.

 

வினைச்சொல்

பழம்பாடம்

 

1மூவிட வினைச் சொற்களை உதாரணத்துடன் எழுது.
2தன்மை ஒருமை காட்டும் விகுதிகள் யாவை?
3தன்மைப் பன்மை காட்டும் விகுதிகள் யாவை?