பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


சொல்லின் புறத்திலிருந்து பொருளைச் சுட்டியது என்று சொல்ல வேண்டும். அதுவே புறச் சுட்டாம்.

"அ, இ, உ என்ற மூன்று எழுத்துக்களும் சொற்களுக்கு முதலில் வந்து, பொருட்களைச் சுட்டிக் காட்டிய பொழுது அச் சொற்களில் இருந்து அவற்றை நீக்கியகால் எஞ்சிய சொற்களுக்குப் பொருள் இருக்குமானால் அவை புறச் சுட்டு என்று பெயர் பெறும்."

அகச்சுட்டிற்கும் புறச் சுட்டிற்கும் உள்ளவேறுபாடு:

அகச்சுட்டிலும் புறச்சுட்டிலும் சுட்டெழுத்துக்கள் சொற்களின் முதலில் நின்றாலும், அவற்றை அச் சொற்களிலிருந்து நீக்கி விட் டால் அகச்சுட்டில் எஞ்சிய சொற்களுக்குப் பொருள் இராது. புறச்சுட்டில் எஞ்சிய சொற்களுக்குப் பொருள் உண்டு. சுட்டெழுத்துக்கள் சொற்களின் முதலில் தனித்து உள் நின்று பொருள்களைச் சுட்டிக் காட்டி, அச் சொற்களைவிட்டு அவை நீங்கியபொழுது, எஞ்சிய சொற்களுக்குப் பொருள் இராதிருப்பதே அகச்சுட்டாம்.

சுட்டெழுத்துக்கள் சொற்களின் முதலில் தனித்து, புறத்தில் நின்று பொருள்களைச்