பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டு ரை நாவலர், பாவலர், சொல்லின் செல்வர், சுந்தரர், நாவுக்கரசர், மணிவாசகர் என்று மக்களில் சிலர் புகழ் கொண்டு விளங்க நாம் பார்க்கிருேம். தாம் படித்ததை மற்றையோர் ஏற்கும் வண்ணம் திறம்படச் சொல்லுதலே பேச்சின் திறமையாம். ஒவியம் போன்று ஒருவர் தம் கருத்தை மற்றை யோர்க்குப் படம் பிடித்துக் காட்டலே சொல்லின் திறமையாம். அவ்வாருன சொற்சாதுரியமுள்ளவர் களே நாவலர், நாவுக்கரசர், மணிவாசகர், சொல்லின் செல்வர், சுந்தரர் முதலிய பல பெயர்களை அடை கின்றனர். பேசுந்திறன் எவ்வளவு முக்கியமானதோ அதே போல எழுதுந்திறனும் முக்கியமானதாம். நல்ல கட்டுரை எழுத விரும்புகின்றவர்கள் பல பெரியார்கள் எழுதிய பல புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும். படிக்குங்கால் ஒரு பொருளைப்பற்றி எழுதி யிருப்பவர்கள் எவ்வாறு தாம் எடுத்த பொருளுக்குத் தோற்றுவாய் செய்கின்றனர் என்பதையும், அத் தோற்றுவாய்க்குத்தக்க எவ்வாறு முடிக்கின்றனர் என்பதையும் க வ னி க் க வேண்டும். இடையில் அவர்கள் எடுத்த பொருளைப் பல பத்திகளில் தொடர் பாகக் கூறுவதையும் கவனிக்க வேண்டும். இவ்வாறு கவனிப்பார்களேயானல் ஒரு பொருள் ப ற் றி ய