பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


'அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து அம், தம், நம், தும், ஏ. அ, உ, ஐ. கு, ன் என்ற பதி னேழும் பொதுச் சாரியைகளாம். மேலும் தன். தாம். ஆம், ஆ, து முதலியவைகளும் இ ைவ போன்றவை களும் சாரியை களாக வரும்' சூத்திரம்: "அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன இன்ன பிறவும் பொதுச் சாரியை யே'. சந்தி நடந்தனன்- இதில் நட' பகுதி, 'அன்' விகுதி, 'த் இடை நிலை, 'அன்' சாரியை, ‘ந்’ சந்தி. இது பகுதிக்கும் இடை நிலைக்கும் இடையில் வந்தது. படித்தான்-இதில் (படி+த் +த்+ ஆன்)-தோன்றல் வந்தான் -இதில் (வா+(த்)ங்+த்+ஆன்)-திரிதல் நடவான் -இதில் (நட+வ் + ஆ + ஆன்)-கெட்டது 'பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வருகின்ற தோன்றல், திரிதல். கெடுதல் ஆகிய மூன்று விகாரங் களும் சந்தியாம். இது எல்லாப் பகுபதச் சொற்களிலும் இராது". விகாரம் திட்பம் - இதில் திண்மை என்பது பகுதி அது திண் என்ருகி திட்பம் என்ருயிற்று. இது மெல்லினம் வல்லினமான விகாரம்.