பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


வாழ்க, வாழிய, வாழியர் == இவை வாழ்த்துதல் பொருளில் வந்தன. கெடுக, அழிக-இவை வைதல் பொருளில்வந்தன. அருளுக, ஈக - இவை வேண்டிக் கோடற் பொருளில் வந்தன. கூறுக, ஓதுக - இவை விதித்தல் பொருளில் வந்தன. வியங்கோள் வினை முற்று மேற்கூறியவாறு வாழ்த்துதல், வைதல் என்ற பல பொருள்களில் வரும். "வியங்கோள் வினைமுற்று ஒருவகை ஏவல் பற்றியதே. முன்னிலையில் வருவதை ஏவல் என்றும், ஐம்பால் மூவிடங்களிலும் பொதுவாக வருவதோடு வாழ்த்துதல், வைதல், வேண்டிக் கோடல், விதித்தல் என்ற பல பொருள்களிலும் வரும். க, இய, இயர் அ என்பவைகளே இவற்றின் விகுதிகளாம்". ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறு பாடு (அ) ஏவல் கட்டளைப் பொருளில் மாத்திரம் வரும். வியங்கோள் வாழ்த்துதல், வைதல், வேண்டிக் கோடல், விதித்தல் எ ன் ற பல பொருளில் வரும். (ஆ) ஏவல் முன்னி ' யில் மாத்திரம் வரும். ஆல்ை வியங்கோள் இருதினை, ஐம்பால், மூவிடங் களிலும் வரும். == (இ) ஏவலில் ஒருமை, பன்மை என்ற வேறுபாடுகள் உண்டு. வியங்கோளில் அ ப் பா கு பா டு க ள் இல்லை.