பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. பொது 1. வெளிப்படை, குறிப்பு நிலம், நீர், தீ, காற்று, வானம், வந்தான், சென் றது- இச்சொற்கள் வெளிப்படையாகத் தம் பொருளை ஊர் சிரித்தது - இதில் 'ஊர்' என்பது ஊரி லுள்ள மக்களைக் காட்டிற்று. இச் சொல் குறிப்பாகவே தன் பொருளை உணர்த்திற்று ஆயிரம் மக்கள் பொருதார் - இதில் மக்கள் என்னும் பொதுப் பெயர் போர் என வரும் சொல்லால், பெண்பாலை ஒழித்து ஆண்பாலைக் குறிப்பால் காட் டிற்று. இவ்வாறு வருவது ஒன் ருெழி பொதுச் சொல்லாம். மாைமலர்- இதில் மரை என்னும் விகாரச் சொல் மலர் என்னும் சொல்லால் தாமரையைக் குறிப்பால் உணர்த்திற்று. இவ்வாறு வருவது செய்யுள் விகாரச் சொல்லாம். கால் கழுவி வந்தான் - இதில் கால் என்னும் தகுதி வழக்குச் சொல், கழுவி என வருஞ் சொல்லால் மலர் என்பதைக் குறிப்பால் காட்டிற்று. இவ்வாறு வருவது தகுதி வழக்குச் சொல்லாம். ஊர் மகிழ்ந்தது - இதில் ஊர் என்னும் இடப் பெயர் மகிழ்ந்தது என வருஞ் சொல்லால், மக்கள் என்பதைக் குறிப்பால் காட்டிற்று. இவ்வாறு வருவது ஆகுபெயராம். _டி