பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


டவள் சாவாள், நஞ்சுண்டவர் சாவார், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டவை சாம் என்பனவும் சொல்லாமலே அமையும். இவற்றுள் சோறு என்னும் பெயர்ச் சொல், ஒழிந்த கறி மு த லி ய தன் இனங்களையும், உண்டான் என்னும் வினைச்சொல் தின்ருன் முதலிய தன் இனங் களையும், வெற்றிலை என்னும் பெயர்ச் சொல் மற்றையப் பாக்கு சுண்ணும்புகளையும், உண்டவன் சாவான் என் னும் ஆண் பாற் பெயர் வினைகள் மற்றைய நான்கு பாற் பெயர் வினைகளையும் கொள்ளுதற்குரியனவாம். "நால்வகைச் சொற்களுள் ஒரு சொல் தன்னை உணர்த்துவதோடு ஒழிந்து நின்ற தன் இனங்களையும் தழுவிக் கொள்ளுதற்கு உரியதே இனங்குறித்தலாம்."