பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV. புணர்ச்சி 1. பண்புத் தொகைப் புணர்ச்சி நல்லன், சிறு பொருள் - இவற்றில் நன்மை, சிறுமை என்பவற்றின் மை விகுதி போயிற்று. கரியன், சிறியிலை - இவற்றில் கருமை, சிறுமை என்பவற்றின் மை விகுதிபோய் உகரம் இகரமாயிற்று பாசி, மூதூர் - இவற்றில் பசுமை, முதுமை என்பவற்றின் மை விகுதி போய் ஆதி நீண்டது. பைந்தார் - இதில் பசுமை என்பதன் மை விகுதி போய் நடு நின்ற உயிர்மெய்யுங் கெட்டு, முதலிலிருக் கும் அகரம் ஐ க | ர மா கி, வரும் எழுத்திற்கு இன வெழுத்து மிகுந்தது. குற்றி, நட்டாறு == இவற்றில் குறுமை, நடுமை எ ன் ப வ ற் றி ன் மை விகுதி போய்த் தன் ஒற்று இரட்டியது. செய்யன், வெவ்வுயிர் - இவற்றில் செம்மை, வெம்மை என்பவற்றின் மை விகுதி போய் முன் நின்ற மகர மெய் திரிந்தது. "மை விகுதி போதலும், நடுவில் நின்ற உகரம் இகரமாதலும், முதலில் நின்ற குறில் நெடிலாதலும், முதலில் நி ன் ற அகரம் ஐகாரமாதலும், தன் மெய் நடுவே மிகுதலும், மை விகுதிக்கு முன்னே நின்ற மெய் வேறு ஒரு மெய்யாதலும், வருகிற வல்லெழுத்