பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


'எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் - என்ற நான்கு வகை அளவைச் சொற்களும் தம் முன் தனித் தனி அடுக்கி வருமிடத்து 'உம்' என்ற இடைச்சொல் தொக்கு நிற்பதே உம்மைத் தொகையாம்." குத்திரம்: 'எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் எனும் நான்கு அளவையுள் உம் இலது அத்தொகை' குறிப்பு:- சேர சோழ பாண்டியர், புலிவிற் கெண்டை -இவை பன்மொழித் தொடர். அன்மொழித் தொகை பூங்குழல் வந்தாள் - இது பூவையுடைய குழலை யுடைய பெண் வந்தாள் என விரியும். இது இரண் டாம் வேற்றுமைத் தொகைப் புற த் து ப் பிறந்த அன் மொழித் தொகையாம். (இவ்வாறு ஏழாம் வேற்றுமை முடிய ஆறு அன்மொழித் தொகைகள் உண்டு). தாழ் குழல் வந்தாள் - இது தாழ்ந்த கூந்தலை யுடைய பெண் வந்தாள் என விரியும். ஆகவே இது வினைத் தொகைப் புறத்துப் பிற ந் த அன்மொழித் தொகையாம். f ஆண்டகை த ந் தா ன் - இது ஆண்மையாகிய தகுதியை உடையவன் தந்தான் என விரியும். ஆகவே இது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் . ର தாகையாம். துடியிடை சென்ருள் - இது து டி .ே பாலு ம் இடையை உடையவள் சென்ருள் என விரியும். ஆகவே இது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாம்.