பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற் றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், இடைச் சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத்தொடர் ஆகிய ஒன்பது தொகா நிலைத் தொடரும் சேரப் பதின்ைகு வகைப்படும். குத்திரம்: வேற்றுமை ஐ முதல் ஆரும் அல்வழி தொழில்பண்புஉவமை உம்மை அன்மொழி எழுவாய் விளியீர் எச்சம்முற்று இடைஉரி தழுவு தொடர் அடுக்கெனஈரேழே. 5. மெய்யீற்றின் முன்மெய் (ணகர, னகர, ஈறு, யகர, ரகர ழகர ஈறு. லகர ளகர ஈறு - பொது விதி) மெய்யீற்றின் முன்மெய் வேள் - யாவன் - வேளியாவன்- இதில் நிலைமொழி ஈற்றில் ளகர மெய் வந்தது. அதன்முன் வருமொழி முதலில் யகர மெய் வந்திருக்கிறது. இரண்டும் புணரும் போது இடையில் இகரம் சேர்ந்தது. இது அல்வழிப் புணர்ச்சி. மண் + யாப்பு - மண்ணியாப்பு - இதில் நிலைமொழி ஈற்றில் ணகர மெய் வந்தது. அதன்முன் வருமொழி முதலில் யகர மெய் வந்திருக்கிறது. இரண்டும் புணரும் போது இடையில் இகரம் சேர்ந்தது. இது வேற்றுமைப் புணர்ச்சி.