பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


1. குறளடி திரைத்த சாலிகை நிரைத்த போனிரைந் திரைப்ப தேன்களே விரைக்கொண் மாலையாய் இப்பாவின் அடிகள் நான்கில் ஒவ்வொன்றும் இரு சீர்களைக் கொண்டிருக்கின்றது. ஆகவே இதில் உள்ள ஒவ்வோர் அடியும் குறளடியாகும். " இரு சீர்களால் வருவதே குறளடியாம்." 2. சிந்தடி இருது வேற்றுமை இன்மையாற் கருதி மேற்றுறக் கத்தினே னரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினய் இப்பாவின் அ டி க ள் நான்கில் ஒவ்வொன்றும் மூன்று சீர்களைக் கொண்டு இருக்கின்றது. ஆகவே இதிலுள்ள ஒவ்வோரடியும் சிந்தடியாம். ' மூன்று சீர்களால் வருவதே சிந்தடியாம்." 3. அளவடி மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணுயி னர். இப்பாவில் முதல் மூன்று அடிகளில் ஒவ்வொன் றும் நான்கு சீர்களைக் கொண்டிருக்கின்றது. ஆகவே அவைகளில் ஒவ்வொன்றும் அளவடியாம். " நான்கு சீர்களால் வருவதே அளவடியாம்.'