பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 குறிப்பு: உயிர் அளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மக்ரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவற்றை மேல் வகுப்பில் படிப்பீர்கள். நன். சூ. உயிர்மெய் ஆய்தம் உயிர்அளபு ஒற்றளபு அஃகிய இ, உ, ஐ, ஒள மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும். கேள்விகள் எழுத்தாவது யாது? முதல் எழுத்து என்பவை எவை ? சார்பெழுத்து என்பவை எவை? அவை எத்தனைே

ஒலி வடிவு, வரி வடிவு என்பவை யாவை ? பயிற்சி-1 கீழ் வருவனவற்றினின்றும் முதல் எழுத்துக்களையும் சார் பெழுத்துக்களையும் எடுத்து எழுதுக - "குழலினி தியாழினி தென்பர்தம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்.' அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க் கென்புதோல் போர்த்த உடம்பு.’ மாத்திரை 5. எழுத்துக்களே உச்சரிக்கும் கால அளவு மாத்திரை எனப்படும். கண் இமைப்பதும், கை கொடிப்பதும் ஒரு மாத்திரைக்கு அளவாம். நன். சூ. இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை.