பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I G6 12. மெய்யெழுத்துக்களில் ஞ், ண், ங், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினுெரு மெய்யும் (உ-ம்) உரிஞ், கண், வெரிந், மரம், அவன், நெய், தேர், பல், தெவ், வாழ், கள். (வெரிந் = முதுகு, தெவ் = பகை.) குறிப்பு : ஞ், ந், வ் என்னும் இம்மூன்று மெய்களும் அடிக்கடி வழக்கத்தில் வாரா, நன்-சூ. ஆவி ஞணநமன வரல வழளமெய் சாயும் உகரம் நாலாறும் ஈறே. கேள்விகள் . மொழிக்கு ஈற்றில் வாராத உயிர் எழுத்து எது ? 2. எந்த எழுத்துக்கள் வழக்கில் மொழிக்கு முதலாய் வாரா? - 3. மெய்யெழுத்துக்களில் மொழிக்கு ஈற்றில் வருவன யாவை ? 4. மொழிக்கு ஈற்றில் வாராத மெய்கள் எவை ? பயிற்சி-3 1. உயிர் எழுத்து ஒவ்வொன்றும் மொழிக்கு ஈற்றில் வரத் தனித்தனி இரண்டிரண்டு உதாரணம் தருக. 2. மெய்யெழுத்து ஒவ்வொன்றும் மொழிக்கு ஈற்றில்வரத் தனித்தனி ஒவ்வோர் உதாரணம் தருக. 3. ஊ, ஏ, ஈ, ஓ, ஒள-இந்த எழுத்துக்கள் மொழிக்கு ஈற் றில் வரும்படி உதாரணம் எழுதுக. 4. ழ், ஞ்-இந்த மெய்கள் மொழிக்கு ஈற்றில் வரும்படி உதாரணம் தருக. I