பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 15 15. இவ்விடுகுறிப் பெயரே, எல்லாப் பெயருக் கும் பொதுவாக வரின், அதனே இடுகுறிப் பொதுப் பெயர் என்றும், ஒன்றற்கே சிறப்பாக வரின், அதனை இடுகுறிச் சிறப்புப் பெயர் என்றும் கூறுவர். (உ.ம்) மரம், பட்சி - இடுகுறிப் பொதுப்பெயர். மாமரம், கிளி - இடுகுறிச் சிறப்புப்பெயர். 16. காரணப் பெயராவது, யாதானும் ஒரு கார ணம் பற்றி ஒரு பொருளுக்கு வழங்கும் பெயராகும்: (உ-ம்) பறவை, நாற்காலி. 17. காரணப் பெயர் சில பொருள்களுக்குப் பொதுவாக வழங்கிவரின், காரணப் பொதுப் பெயர் என்றும், ஒரு பொருளுக்கே சிறப்பாக வழங்கிவரின், காரணச் சிறப்புப் பெயர் என்றும் வழங்கப்பெறும். (உ.ம்) அணி, பறவை-காரணப் பொதுப் பெயர். முடி, மீ ன் குத் தி-காரணச் சிற ப்பு ப் பெயர். நன்-சூ இடுகுறி காரணப் பெயர் பொதுச் சிறப்பின. கேள்விகள் 1. இடுகுறிப் பெயர், கார ண ப் பெயர் என்பவை யாவை ? 2. இடுகுறிப் பெயரும் காரணப் பெயரும் எத்தனை வகைப்படும்? அவை யாவை? ஒவ்வொன்றை பும் நன்கு விளக்குக.