பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 17 குறிப்பு: (1) எல்லாம் என்னும் சொல், தன்மை, முன் னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் வரும். 呜多 லின் அதை இடப் பொதுப் பெயர் என்பர். (2) எல்லாம் என்னும் இடப்பொதுப் பெயர் பன்மை யில் மட்டுந்தான் வரும், (உ.ம்) நாம் எல்லாம் - தன்மையில் வந்தது. நீங்கள் எல்லாம் - முன்னிலையில் வந்தது. அவர்கள் எல்லாம் - படர்க்கையில் வந்தது. நன்-சூ, தன்மை 4:ான்நான் tாம்நாம் ; முன்னிலே எல்லீர் நியீர் நீவிர் நீர்நீ: அல்லன படர்க்கை எல்லாம் எனல்பொது, rః ::::: கேள்விகள் 1. தன்மை, முன்னிலே, படர்க்கைப் பெயர்கள் என் பவை யாவை ? 2. இடப் பொதுப் பெயர் என்பது எது? 3. இடப் பொதுப் பெயர் எவ்வெண்ணில் மட்டும் வரும் ? பயிற்சி - 7 1. கீழ் வருவனவற்றில் வந்துள் ள தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்களைக் குறிப்பிடுக. :யான் அல்லேன். அவர்கள் வருவார்கள். நான் செல் வேன். நீ வா. நீர்போமின் மரம் வளர்ந்தது. யாம் கூறுவோம். நீவிர் யாவிர்? பறவை பறக்கும். நாம் சொல்வதைக் கேள். நீவிர் யாண்டுச் செல்வீர்? நீவிர் எல்லீரும் நம் தோழர். மிருகம் காட்டில் வசிக்கும். என்பது இடப்பொதுப் பெயர் ஆதல்.உதா சனத்தால் நன்கு விளக்குக.