பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வினைச்சொல் 48. வினேச்சொல் இரண்டு வகைப்படும். அவை தெரிகிலவின, குறிப்பு வினை என்பன. 49. தெரிநிலை வினேயாவது, இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களில் ஒன்றை வெளிப்படையாகக் காட்டி வருவது. (உ-ம்) செய்தான் - இறந்தகாலத் தெரிநிலைவினை செய்கிருன் - நிகழ்காலத் தெரிநிலை வினை செய்வான் - எதிர்காலத் தெரிநிலை வினை 50. குறிப்பு வினேயாவது, காலத்தை வெளிப் படையாக உணர்த்தாமல் சொல்வோனது குறிப்பால் காலம் உணர வருவது. (உ-ம்) அவன் பொன்னன் - இங்குப் பொன்னன் என்னும் குறிப்புவின பொன்னே யுடை யன் என்னும் பொருளை மட்டும் நமக்கு வெளிப்ப்டையாகக் க் ட் டி இதுபோது பொன்னஞ் அல்லது இனிப் பொன்னன. என்று வெளிப்படையாகக் காலத் தை உணர்த்தாமல் இருப்பதை அறிக. குறிப்பு (1) இக்குறிப்புவினை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடியாகவும் பிறக்கும்.