பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கீழ் வருவனவற்றுள் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுக்களைக் குறிப்பிடுக :முருகன், அருளும், பசு அருந்தும், ஓடும் மாடு பாடும் கிளி, மான் துள்ளும், பறவைகள் பறக்கும், ஆடும் பம்பரம், நாடும் பொருள், கட்வுள் அருள் செய்யும், ங்ாடும் பணி. 53. வியங்கோள் வினே முற் று, வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் என்னும் பொருளில் வரும். வியங்கோள் வினைமுற்று (உ-ம்) வாழ்க 1 - வாழ்தல் தருக ! -வேண்டல் அழிக! - வைதல் ஏறுக - விதித்தல் குறிப்பு: (1) இவ் வினைமுற்றுப் பெரும்பாலும் ஈற்றில் 'க' என்றும், சிறு பான்மை இய, இயர்.இ என்றும் முடியும். (உ-ம்) வாழ்க - க வாழியர் - இயர் வாழிய-இய வாழி - இ. 2. இவ் வினைமுற்று. ஜம்பால் மூவிடத்திலும் வரும் (உ.ம்) அவன் வாழ்க-ஆண்பாலில் வந்தது. நீ வாழ்க - முன்னிலையில் வந்தது. ஏனைய பால் இடங்கட்கும் இவ்வாறே கொள்க. கேள்விகள் . வியங்கோள் வினைமுற்ருவது யாது ? இவ் வினைமுற்று எந்தெந்தப் பொருளில் வரும்? . இவ் வினைமுற்றிற்குரிய அடையாளம் என்ன?