பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 2. கோடிட்ட இடங்களில் தகுந்த ஒர் எழுத்து மொழிகளே அமைக்க : - உடைந்தது, தமிழ் மூன்றுந் - பற்றி எரிகிறது, துணியை - வாங்கு. --- இடு, இங்குக் கையை -- 3. எழுத்துக்கள் தொடர்ந்த சொற்கள் பத்து கூறுக. 4. கீழ்வரும் எழுத்துக்களைப் பொருள்பட அமைக்க:ருன்முக, தந்சுர்ர, டகள்வு, வில்கோ, குகுமங்ம். சொல்லின் வகை 2 சொற்கள் நான்கு வகைப்படும். அவை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன. பெயர்ச்சொல் 3. பெயர்ச் சொல்லாவது, பொருள் முதலிய வற்றின் பெயரைக் குறிப்பதாம். (உ-ம்) மரம் விழுந்தது பலகை உடைந்தது; மாடு கத்தியது ; குழந்தை அழுகிறது. 4. பெயர்ச் சொல் ஆறு வகைப்படும். அவை பொருட்பெயர். இடப்பெயர். காலப்பெயர், சினேப் பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்பன. 5. ஒரு பொருளின் பெயரை க் குறிப்பது பொருட்பெயர். (உ-ம்) குமரன், வள்ளி, வேங்கை, காக்கை.