பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 6. ஒர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப் பெயர். (உ-ம்) மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிதம் பரம், மதுரை. 7. காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர். (உ-ம்) காலை, மாலை, ஆண்டு, நாள். 8. ஒரு முழுப் பொருளின் ஒரு பாகத்தை (உறுப்பை)க் குறிப்பது சினைப் பெயர். (சினே, உறுப்பு, அவயவம் என்பன ஒரே பொருளின.) (உ-ம்) கை, தலை, கண், கால், கிளை, வேர். 9. ஒரு பொருளின் குணத்தைக் காட்டுவது குணப் பெயர். (உ-ம்) தீமை, நன்மை, அழகு, வெண்மை. 10. ஒரு தொழிலின் பெயரைக் குறித்து வருவது தொழிற் பெயர். (உ.ம்) நடத்தல், வருகை, ஏற்றுமதி, செலவு. கேள்விகள் 1. சொற்கள் எத்தனை ? அவை எவை? 2. பெயர்ச்சொல்லாவது யாது ? அஃது எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? ஒவ்வ்ொன் றையும் விளக்கி உதாரணம் தருக. 3. சினை’ என்னும் பொருளைத் தரும் வேறு சொற்கள் எவை ?