பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இடம் 24. இடமாவது, இலக்கணத்தில் சொல்லின் நிலைக்குறிய ஸ்தானமாம். இது தன்மை, முன்னிலே, படர்க்கை என மூவகைப்படும். 25. தன்மையாவது, பேசுபவனக் குறிக்கும் இடமாம். (உ-ம்) நான், நாம். 26. முன்னிலேயாவது எதிரில் நின்று கேட்பவனேக் குறிக்கும் இடமாம். (உ-ம்; நீ, நீர், 27. படர்க்கையாவது, தன்மையும் முன்னிலேயும் அல்லாத இடமாம். - (உ-ம்) அவன், அது, பலகை, மரம். குறிப்பு : (1) இம்மூன்று இடங்களுக்கும் ஒருமை பன்மை என்னும் எண்கள் உண்டு. (உ.ம்) நான் - தன்மை ஒருமை நாம் - தன்மைப் பன்மை நீ - முன்னிலை ஒருமை நீர் - முன்னிலைப் பன்மை அவன் - படர்க்கை ஒருமை அவர்கள் - படர்க்கைப் பன்மை (2) தன்மை, முன்னிலை இடங்களுக்குத் திணை, பால் இல்லை. படர்க்கை இடம் மட்டும் திணை,பால்களைப் பெற்று வரும்.