பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111. புணர்ச்சி 1. சொற்கள் ஒன்ருேடொன்று சேர்வது புணர்ச் சியாம். (உ-ம்) நான் - வருகிறேன் = நான் வருகிறேன்: 2. இப்புணர்ச்சி இரண்டு வகைப்படும், அனை இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என்பன: 3. இயல்புப் புணர்ச்சியாவது, சொற்கள் ஒன்ருே டொன்று சேரும்போது ஒருவித மாறுதலும் பெருமன் சேர்வதாம். (உ-ம்) நீ - படி = நீ படி யார் - பெரியவர் = யார் பெரியவர். 4. விகாரப்புணர்ச்சியாவது, சொற்கள் ஒன்துே டொன்று சேரும்போது சில சொற்கள் விகாரப்பட்டுக் சேர்வதாம். (உ-ம்) அந்த - பையன் = அந்தப்பையன் பல் - பொடி = பற்பொடி. 5. விகாரம் மூன்று வகைப்படும். அவை தோன் றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரக் என்பன. 6. தோன்றல் விகாரமாவது, இரண்டு சொன் கள் ஒன்ருேடொன்று சேரும்போது அவற்றின் E வில் ஒர் எழுத்துத் தோன்றுவதாம். (உ-ம்) தமிழ் + பாடம் = தமிழ்ப்பாடம்