பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எழுத்திலக்கணம் கூறுதல் 14. எழுத்திலக்கணம் கூ று த ல | வ து, ஒரு தொடரில் உள்ள எழுத்துக்கள் தனித்தனி இன்னின்ன எழுத்துக்கள் என்று கூறுதல். (உ.ம்) அஃது என் வீடு. அ உயிர் எழுத்து, குறில், சுட்டு. ஃ ஆய்த எழுத்து. து வல்லின உயிர்மெய், குறில். எ உயிர் எழுத்து, குறில். ன் மெல்லின மெய். வீ இடையின உயிர்மெய், நெடில். டு வல்லின உயிர்மெய், குறில். கேள்வி எழுத்திலக்கணம் கூறுதலாவது என்ன ? பயிற்சி.26 நீ அந்தக் கடைக்குச் சென்று எஃகினல் ஆன கத்தியையா வாங்கினய் ?-எழுத்திலக்கணம் கூறுக. எழுத்து மாருட்டம் 15. மாணவர்கள் ஒர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஓர் எழுத்தை எழுதிவிடுவதுமுண்டு. பின்னே காணும் விதியை மனத்தில் வைத்துக்கொண்டால், அவ்வாறு செய்யமாட்டார்கள். உதாரணமாக ங், ண், ன் இந்த எழுத்துக்களே மட்டும் இங்குக் கவனிப் போம் :