பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 கேள்விகள் 1. வேற்றுமைத் தொகையாவது யாது? 2. வேற்றுமை விரியாவது யாது? 3. எவ்வெவ்வேற்றுமைகள்தொகையாகவாரா?ஏன்? பயிற்சி-13. 1. கீழ் வருவனவற்றுள் இவை தொகை, இவை விரி எனக் குறிப்பிடுக : மன்னனின் கற்ருேன் சிறப்புடையன், என் செல்வமே, உள்ளத்தின் உள்ளே, கண்ணில் கருமனி, அமரர் ஏறு, நல்லாரோடு இசைந்திலேன், வழித்துணை,நோய் மருந்து, தோடு உடைய செவியன், விடை ஏறி, மதி சூடி, காடுடைய சுடலை, மலரால் நாளும் பணிந்து. 2. கீழ் வருவனவற்றுள் தொகைக்கு விரியும், விரிக்குத் தொகையும் கூறுக :எங்களது பள்ளிக்கூடம், சென்ற வாரத்தில், தேர்வில் தேறினேன், அச்சம் பெற்றேன், புத்தகங்களைக் கொணர்வேன், சிந்தை வை. 3. காடு, சிதம்பரம், வேல், வீடு-இச்சொற்களோடு 3, 4, 6, 7 இந்த வேற்றுமை உருபுகள் தொகையாகவும் விரி யாகவும் வர உதாரணம் தருக. வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் பெயர்கள் 19. யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது என் எனத் திரியும்,