பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வினேச்சொல் 25. பெயர்ச் சொல்லின் தொழிலேக் காட்டுவது வினைச் சொல்லாம். இது பலவகைப்படும். அவற் றுள் சில செய்வினை, செயப்பாட்டுவினை, தன்வினை பிறவினை என்பன. 26. செய்வினையாவது, கருத்தா செய்யும் செப் கையை (வினேயை) நேரே உணர்த்துவது. .நான் பாடத்தை எழுதுகிறேன் (فمع) கமலம் கோலம் போடுகிருள். 27. செயப்பாட்டு வினையாவது எழு வா யின் செ ய ல ச் செயப்படுபொருள் ஏற்று வருவதை உணர்த்துவது. (உ.ம்) பாடம் என்னுல் எழுதப்பட்டது. ($ காலம் கமலத்தால் போடப்பட்டது. குறிப்பு : (1) செயப்பாட்டு வினையின் வினைச்சொல் படு என்னும் விகுதியைப் பெற்று வரும். (2) செய்வினையில் எழுவாயாக வருவது செயப்பாட்டு வினையில் மூன்ரும் வேற்றுமை உருபை ஏற்று வரும். செய் வினையில்செயப்படுபொருளாக வருவதுசெயப்பாட்டுவினை யில் எழுவாயாக வரும். (உ-ம்) குமரன் குளத்தைக் கண்டான். குளம் குமரனுல் காணப்பட்டது.