பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. எழுத்து

1. சொற்கள் உண்டாதற்குக் காரணமாக இருப்பது எழுத்து. அது எழுதப்படுவதினால் எழுத்து எனப்பட்டது. அது நான்கு வகைப்படும். அவை உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து என்பன.

உயிர் எழுத்து


2. உயிர் மற்றொன்றின் உதவி இல்லாமல் தானே நடமாட வல்லது. அதுபோலப் பிற எழுத்துக்களின் உதவி இல்லாமல் உச்சரிக்கும் வன்மையுடைய எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன. அவை பன்னிரண்டு. அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்பன.

குற்றெழுத்து

3. அந்தப் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களில் குறைந்த ஒசையுடையவை ஐந்து. அவை அ, இ, உ, எ, ஒ, என்பன. அவற்றைக் குற்றெழுத்து என்றும், குறில் என்றும் கூறுவர்.

நெட்டெழுத்து

4. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டனுள் ஐந்து குற்றெழுத்துக்கள் போக மிகுதியாய் உள்ள-