பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 91

எண்ணற்றோர் இலண்டனுக்குக் கப்பலில் சென்றுதான் கல்விப் பட்டம் பெற்றார்கள். சுவாமி விவேகானந்தர் உலக மத மாநாட்டில் பேசுவதற்காக அமெரிக்கா சென்றதும் கப்பல் பயணம்தான்!

எனவே, கடல், ஆறு ஆகியவற்றைக் கடந்து செல்ல, முற்காலத்தில் பாய் மரம் விரிக்கப்பட்ட ஓடம், படகு, கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், போர்க் கப்பல், வணிகக் கப்பல், பயணிகள் கப்பல், சரக்குகள் ஏற்றிச் செல்லும் கப்பல் ஆகியவை பயன்பட்டன.

கப்பல்கள் பெரிய அளவுகளில் கட்டுவதற்கு விஞ்ஞான அறிவு பெரிதும் தேவைப்பட்டது. அதைப் பல நாட்டு விஞ்ஞானிகள் கால வளர்ச்சிக்கு ஏற்றவாறு கண்டுபிடித்தார்கள்.

கப்பல்களில் பல மாடிகள் கட்டப்படுகின்றன. அந்த மாடிகளில் பயணிகள் வசதியாகத் தங்குவதற்குப் பல அறைகளை நிர்வாகிகள் கட்டினார்கள். ஓர் கிராமமே கடலில் மிதந்து செல்வதைப் போல அவை அமைக்கப்பட்டன.

உணவு சமைப்பதற்கும், உண்பதற்கும், கப்பலுக்குள்ளே விளையாடும் இடங்களும், நீய்ச்சலடிக்கும் நீர்நிலைக் குளமும், சினிமா காட்சிகள் பார்க்கும் திரை அரங்கு, பயணிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான கடைகளும், தொலைபேசி வசதிகளும், வானொலிகள், ராடர் கருவி அமைப்புகள் ஆகிய அத்தனையும் பெரிய கப்பல்களில் இன்றும் இருக்கின்றன.

வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் கப்பல்களில் அந்தந்த சரக்குகளை அடுக்கி எடுத்துச் செல்லும் வகையில் பல பிரிவுகளுடைய பாகங்கள் கப்பலில் கட்டப்பட்டு இருப்பதையும் காணலாம்.

கப்பல்களில் பல வகை உண்டு. அவை போர்க் கருவிகளோடு உள்ள பீரங்கிக் கப்பல், விமானங்களை வைத்திருக்கும் விமானக் கப்பல் நீர் மூழ்கிக் கப்பல்கள், சிறுசிறு படகுகளை வைத்துக் கொள்ளும் கப்பல் பகுதிகள் ஆகியவை கப்பல்களிலே இக் காலத்திலே அமைக்கப் பட்டுள்ளன.

நமது நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி கொள்வதற்குக் கடற்படை மிகமிகத் தேவை. மொகலாய சாம்ராச்சியத்தில் கப்பல் படைகள் இல்லாமல் போனதால்தான், அந்தப் பேரரசுகள் ஆங்கிலேயர் களிடம் கப்பல்களுக்காக கையேந்தி நின்றன என்பது வரலாறு.

முதன் முதல் கப்பலகளை மரப் பலகைகளால் செய்து பயன்படுத்தினார்கள். விஞ்ஞானம் வளர்ச்சிகள் வரிசையாகப் பெருக