பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி - 93

கப்பல்களில் பல வகைகள் தயாரிக்கப்படுகின்றன பயணிகள் கப்பல், வணிகக் கப்பல், விமானந் தாங்கிக் கப்பல், போர்க் கப்பல், வேவு பார்க்கும் கப்பல், நாசகாரிக் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல், எண்ணெய் கப்பல், மருத்துவ உதவிக் கப்பல் போன்ற கப்பல்கள் ஆகும். இவை அனைத்தும் போர்க் காலங்களிலே நமது நாட்டைக் காக்கும் கடற்படைக் கப்பல்களே!

இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், கப்பலில் பயணம் செய்யும் தமிழ் இலக்கியவாதிகள், கப்பலிலே பயணம் செய்பவர்கள் கண்டு, கேட்டு மகிழ்ச்சியடைவதற்காகக் கப்பல் கவியரங்கமும், பட்டி மன்றமும் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். உவமைக் கவிஞர் சுரதா அந்தக் கவியரங்கத்திற்குத் தலைவராக இருந்தார்.

காற்றினால் ஓடிய மரக் கப்பல்கள் இப்போது கலை வளர்க்கும் கப்பல்களாகவும் காலத்திற்கேற்றவாறு மறுமலர்ச்சிப் பெற்றுள்ளன.

ஆங்கிலேயர்கள் போர்ச்சுக்கிசியர்கள், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக் காரர்கள் போன்ற மேற்கத்திய நாட்டினர் அனைவரும் வியாபாரம் செய்வதற்காக மட்டுமன்றுந நாடு பிடியாசையால் ஒவ்வொரு நாட்டின் கடலோரப் பகுதிகளிலே வந்து தங்கியிருந்துதான் வாணிகம் செய்தார்கள். குறிப்பாகக் கூறுவதால் பிரிட்டிஷ்காரர்கள், கப்பல் வாணிகத்தால் தான் ஆங்காங்கே உள்ள நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தார்கள். இதன் மூல காரணத்தை நன்கு உணர்ந்தால், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம், வெள்ளையனை வாணிகத்தை எதிர்த்துக் கப்பலோட்டினார்! அதனால் இரண்டு ஆயுள் ... தண்டனைகளைப் பெற்றுத் தனது வாழ்க்கை அழித்துக் கொண்டு சுதந்திரத் தியாகியானார். வரலாறு அவரை இன்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது.

எனவே, மாணவ மணிகளே மனிதன் காற்றை வென்றான்; தரையை வென்றான்; தண்ணிரையும் கப்பல் கண்டுபிடிப்புகள் மூலம் Z வென்றுவிட்டான். நீங்கள் என்ன செய்யப் L. 生騷善 போகிறீர்கள்? a. *-ārium iso