பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுவரை வரலாறு கண்டிராத மத நல்லிணக்க ஞானி

தாரா ஷூஹோ! ---

மாணவ - மணிகளே!

நீங்கள் கல்வி கற்கும் பள்ளியில் இந்து, கிறித்துவம், இசுலாம் மற்றும் வேறு சில மத சம்பந்தப்பட்ட மாணவர், மாணவியர்களும் படிப்பார்கள்.

அவர்களும் நமது நாட்டு உடன் பிறவா சகோதரர்களே என்று எண்ணும், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற இன, மத நல்லிணக்கம் பெற்றிட நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு 'பாடறிந்து ஒழுகும் பண்பு உங்களுடைய மன வளர்ச்சியைப் பக்குவப்படுத்துவது மட்டுமன்று, நீங்கள் வாழ்க்கையிலே வளமாக முன்னேறும் நோக்கத்திற்குரிய ஆக்கமும் - ஊக்கமும் தரும்.

மதம், சாதி பேதங்களின் ஆணி வேர்களை அறுத்தெறிந்து, மனிதரில் புனிதனாக வாழும் சான்றாண்மைச் சதிராடும் சமத்துவச் சமுதாயச் சிற்பிகளாகவும் திகழ்வீர்கள். அந்த அறிவைப் புகட்டும் வரலாற்றுச் சம்பவம் இது. படித்துப் பாருங்கள்.

மொகலாயப் பேரரசர் அக்பரின் பேரன் தாரா ஷ9ஹோ! சக்கரவர்த்தி ஷாஜஹான் மகன்; உலக அதியசங்களில் ஒன்று என்று இன்றும் போற்றப்படுகின்ற; ஆக்ரா பெரும் நகரின் யமுனா நதிக்கரை ஓரம் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழந்துக் கொண்டிருக்கின்ற பேரழகு மும்தாஜ் மஹால் எனும் காதல் கல்லறை நினைவு மண்டபத், தாய் பெற்ற அரும் செல்வர்களில்; மூத்தவர்; தாரா ஷ9ஹோ!

தாரா ஷ9ஹோ, சமஸ்கிருத மொழியில் திறம் வாய்ந்த பெரும் புலவர்; அவரது தாய் நாட்டு மொழியான பாரசீக மொழியில் வித்தகர். இவர் பிறந்த நகர் அஜ்மீர்! ஆண்டு 30.3.1615.