பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 97

இன்று வரை எந்த இளவரசரும் இத்தகைய வரலாற்றுப் பொன்னேடுகளைத் தயாரித்ததாக, வரலாற்றில் ஒரு குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்!

தாரா ஷ9ஹோவுக்கு இந்து மத புராண ஆய்வுத் துறையில் உண்டான நூல் வடிவமைப்பு உணர்ச்சி, அவரை வாரணாசி நகருக்குச் சென்று, கங்கை நதிக் கரையிலே பல மாதங்கள் தங்கி, இந்து மதத் தத்துவ ஞானிகளோடு அவர் கூடிக் கலந்து, சிந்தித்து, வாதித்து, கருத்துக்களைக் சேகரிக்கும் நூல் தொகுப்பாளர் ஊக்கத்தை ஊட்டியது.

காஷ்மீர் மலை நகரிலும் - ரீநகர் குன்று சார்ந்த இடத்திலும், தாரா ஷ9ஹோ துறவியர் வாழும் மடங்களைப் 'பாரி மஹால்' என்ற பெயரில் உருவாக்கி, அங்கே அக்ஹலின் முல்லா ஷா என்ற ஞானாசிரியரைப் போதனைக்காக நியமித்துத் தங்க வைத்தார்.

அங்கே இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூபிசம், இஸ்லாத்தின் அறிவு கடந்த உண்மை ஆகியவற்றை ஆராய்ந்து அவ்வவ்வ அறிஞர்களிடம் ஒன்றுக்கொன்றைக் கலந்துரையாடி வாதமிட்டு, உண்மையை உணரும் இறைமைக்குத் தாரா ஹ9ஹோ தொண்டாற்றினார்.

கத்தோலிக்க மத குருவான பூசியோ என்பவரையும் தனது துறவி மட உரையாடலில் கலந்து கொள்ளச் செய்து, கிறித்துவத் தத்துவ ஞான உரையாடலையும் ஒப்பிட்டுக் கேட்டு மகிழ்ந்தார்.

எனவே, மாணவ-மணிகளே நீங்கள் ஒவ்வொருவரும் பள்ளி வாழ்க்கை முடிந்த பின்பு மத நல்லிணக்க ஞானி தாரா ஷஇஹோவாகப் பணி புரியலாம் இல்லையா? அதனால், சர்வ மதச் சகோதர மனப் பான்மை மக்கள் இடையே வேரூன்றி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒரே மனித சமுதாயம் உணர்வு உதயமாகலாம் அல்லவா?

தனது தாத்தாவைப் போலவே, மகா ஞானி அக்பரின் தீன் இலாஹி என்று புதிய மதத்தை நன்கு புரிந்து வைத்திருந்த தாரா ஷ ஹோ. அதற்கு இணையாக பாரசீக இலக்கியங்களில் மறுமலர்ச்சியை உருவாக்கி, முஸ்லிம், இந்து, கிறித்துவ இலக்கியங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்து சிறந்த ஞானியாக வாழ்ந்தார்.