பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தைக் காட்டும் : கடிகாரங்கள் வளர்ச்சி!

மாணவ - மணிகளே! தண்ணீர் கடிகாரம்

கிழக்கு வெளுத்தால், சேவல் கூவினால், காகம் கரைந்தால், வெள்ளி மீன் முளைத்தால், எழு ஞாயிறு எழுந்தால், உச்சி உதயணனில் மனித நிழலை அளந்தால், தினகரன் வியர்த்து திசை சாய்ந்தால், படி ஞாயிறு அழுந்தினால், அந்தி இருள் தூது வந்தால், விளக்கு ஒளிர்ந்ததால், இவற்றிலெல்லாம் தமிழ்மக்கள் தங்களது கால நிலைகளைக் கணக்கிட்டு வாழ்ந்தவர்கள். கடிகாரம் கண்டுபிடிக்கப் பட்டு அது ஓசைகளை அடித்து, காலநிலைகளைக் காட்டிட விஞ்ஞானக் கருவிகள் தோன்றாத பழங்காலத்திலே தமிழர்கள் வாழ்ந்தநிலை இது.

ஆண்டுக்கு பன்னிரெண்டு திங்களென்றும், மாதத்திற்கு முப்பது நாட்கள் என்றும், பெளர்ணமியை, வெள்ளுவா நாளென்றும், வளர் பிறையை உவா என்றும், தேய்பிறையைக் காருவா என்றும், பருதி உலகை வலம் வரும் காலத்தைப் பகலென்றும், பாலொளியைப் பொழி யும் திங்கள் உலா நேரத்தை இரவென்றும், அமாவாசையைக் காரிருள் நாள் என்றும், நேரப் பகுப்புக்களை நாழிகை, ஒரை என்றும், மழைக் காலத்தைக் கார் காலமென்றும், வெயிற்காலத்தைக் கோடை என்றும், முன்பணி, பின்பனிக் காலமென்றும், தமிழர்கள் காலத்தைக் கணக்கிட்டு வாழ்ந்தவர்கள், காலம் கணிக்க முடியாத தமிழர்களது தொன்மை நிலையைத் தமிழ் இலக்கியங்கள் இன்றும் இவ்வாறு பறையறைந்துக் கொண்டிருக்கின்றன. இது தமிழர்களின் காலக் கணக்கீட்டு நிலை!

ஆனால், 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சுமேரிய இனத்தவர்கள், மாதத்தை, நாட்களை, நேரத்தை, நாழிகைகளைக் கணக்கிட ஒரு காலண்டரை - அதாவது, காலக் குறிப்பு முறைகளை வைத்திருந்தார்கள். பாபிலோனியர்கள், கி.மு.3000 ஆண்டின் போது 12 சந்திர மாதங்களைக் கணக்கிட்டு வாழ்ந்தார்கள்.

வட ஆப்ரிக்காவில் இயேசு கிறித்து பிறப்பதற்கு முன்பு, எகிப்திய மக்கள் ஏறக்குறைய 4500 ஆண்டுகளுக்கு முன்பு 365 நாட்கள கொண்டதுதான் ஓராண்டு என்ற காலமுறையைக் கணக்கிட்டு வாழ்ந்