பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 99

தார்கள். அதற்குக் காரணம், அங்கே ஓடும் நைல் நதி ஆண்டாண்டு தோறும் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தின் விளைவின் இடையில் அது 365 நாட்கள் கணக்காக வருவதைக் கண்டு ஆண்டைக் கணக்கிட்டார்கள்.

அந்த 365 நாட்களை 12 மாதங்களால் வகுத்து, மாதத்திற்கு 30 நாட்கள் என்றும் கணக்கிட்டார்கள். மீதி 5 நாட்களை ஆண்டின் இறுதியில் சேர்த்தவர்கள் எகிப்திய நாட்டு மக்களே ஆவர்.

தொல் பொருள் ஆய்வு சார்ந்த பழங்காலக் கண்டுபிடிப்புகள் கூறுவது என்னவென்றால், உயர்ந்த நாகரிக வாழ்க்கை நடத்திய தென் மெக்சிகோ தமிழர்கள், மத்திய அமெரிக்காவில்; பாபிலோனியா போன்ற நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்கள், தென்மேற்கு ஆசிய நிலப்பரப்பில் ஒரு சக்தி வாய்ந்த சாம்ராச்சியத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள்கூட ஏதோ ஒரு வகையான ஒழுங்கமைதியற்ற காலண்டர் கணக்கியலைக் கடைபிடித்து வாழ்ந்துள்ளார்கள் என்று அறிவிக்கின்றது. எனவே, காலத்தை நமது முன்னோர்கள் ஆண்டு, மாதம், நாள், நாழிகை என்று கணக்கிட்டே வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வாறு பல நூற்றாண்டுகள் கடந்து, ஒரு நாளைப் பல கூறுகளாகப் பகுத்து - மணி, நிமிடம், விநாடி என்று கணக்கிடும் நிலைக்கு அவர்கள் மாறினார்கள். ஆனால், இந்த தலை முறைகளில்தான் கடிகாரங்களது வகைகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. -

கடிகாரம் என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் என்ன தெரியுமா? ஓசை என்று பொருள். ஏறக்குறைய கி.பி. 50-க்கும் 150-க்கும் இடையே உள்ள இடைக் காலத்தில் மணியைப் பகுத்துக் கூறும் கால நிலை உருவானது.

இயேசு கிறித்து பிறப்பதற்கு 3500 ஆண்டு காலத்திற்கு முன்பு, பண்டைக் கால எகிப்து நாட்டு மக்கள், நான்கு கற்றுண்களை நாற்பக்கமும் நாட்டினர். அதன் சாய்தளப் பரப்பின் ஓர் உச்சியில் உள்ள புள்ளி அவர்களது பகலிரவு நேரத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இருந்தது. இவை சூரியனைச் சுற்றி அமைந்துள்ள கோள் நிலைகளைப் புரிந்து கொள்ளும் சூழ்நிலைக் காலக் கணக்கிடு.

ஆனால், எகிப்தியர்களின் நிழற் கடிகாரம் நாளடைவில் வளர்ந்து ஒரு நாளை பன்னிரண்டு பாகங்களாகப் பிரித்தது, கால வளர்ச்சிக்கேற்ற வாறு அந்த வளர்ச்சிகள் சமநிலைக்குரிய திருத்தமான உண்மைகளாகப் புலப்பட்டது. இடைக் காலத்தில் கடிகாரத்தில் மெழுகுவர்த்தி ஒளிகளைக் கொண்டக் குறிப்போடுக் கணக்கிட்டார்கள். பிறகு எண்ணெயால் எரியும் விளக்கில், எவ்வளவு எண்ணெய் எரிந்தது என்ற கணக்கையிட்டுக் காலம் அறிந்தார்கள்.