பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

தண்ணி சக்தியின் மூலம், கடிகார ஆய்வு அறிவோடு காலம் அறியும் நிலையை, இயேசுகிறித்து பிறப்பதற்கு 1500 ஆண்டு காலத்திற்கு முன்பே எகிப்து நாட்டு மக்கள் கண்டுபிடித்துக் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள்.

ஒரு பாத்திரத்தில் நிறைய நீரை நிரப்பி, அந்த நீர் ஒரு சிறு துவாரம் வழியாகத் துளித்துளியாக அடிப்பாகத்திலுள்ள பாத்திரத்தில் விழும். ஒரு வழியிலிருந்து மற்றொரு வழிக்கு மாறும் நிலை அது. தண்ணி குறைந்து போகும் அளவு நிலை அவர்களுக்குக் காலத்தைக் கணிக்கிடப் பயன்பட்டது.

பண்டைய கிரேக்க, ரோமானியர்கள், அவர்களது அன்றாட வாழ்க்கைப் பயன்பாடுகளுக்கு - அழகான, வளைவான கடிகாரங்களை உபயோகப்படுத்தினார்கள். கிழக்காசியா, சீனா, ஜப்பான், கொரியா நாடுகளில் கி.பி. இரண்டாவது நூற்றாண்டிலிருந்து கடிகாரம் தொழில் தான் அந்த நாடுகளை வளர்ச்சி பெற வைத்தது. எது எப்படி இருந்தாலும், தண்ணிக் கடிகாரங்களது இயக்கம் அவ்வளவு சரி சமமமாக இல்லை. அதனால் மற்ற வகையானக் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

சைனாவில் சிறிய "W" வடிவமாகச் செய்யப்பட்ட மெழுகு வர்த்திகள், நேரத்தைக் கணக்கிட்டுச் செய்வதற்காக உபயோகப் படுத்தப்பட்டன. மற்றொரு வகையாகவும் அவர்கள் காலத்தைக் கணக்கிட்டார்கள்.

நீண்ட கயிறு ஒன்றில், இடையிடையே சில முடிச்சுக்களைப் போட்டுத் தீயில் எரிய விடுவார்கள். அந்தத் தீ, கயிற்றிற்கு இடையே மத்தியிலுள்ள முடிச்சுக்கு முடிச்சு பற்றி எரியும் நேரத்தைக் கணக்கிட்டும் காலம் கணித்தார்கள்.

ஐரோப்பிய நாடுகள் சில, அதாவது கி.பி. 500க்கும் 150க்கும் இடையே சூரிய நிழற் சாய்வை மணி அறியும் கருவியாகப் பயன் படுத்தின. இந்தக் கதிரவன் நிழலால் மணி அறியும் பழக்கம் அப்போது மக்கள் இடையே செல்வாக்கோடு வளர்ந்துக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட இந்த முறை இருந்து வந்தது.

இந்த வளர்ச்சிகளால் 14-ஆம் நூற்றாண்டுக்கு மேல் பல வகையான தொழில்நுட்பத் திறனோடு, கடிகாரம் பொதுமக்களின் உபயோகத்துக்கு வந்தன. இவை நேரத்தை ஒழுங்காகக் காட்டும் பொறிக் கருவிகளோடு இயங்கின. ஆனாலும், அவ்வளவுச் செம்மையான, திருத்தமான முறையில் அவை அமையவில்லை. என்றாலும், ஒரே ஒரு நேரங்காட்டும் முள் பொருத்தப்பட்டிருந்ததால், அடுத்துள்ள கால்மணி நேரத்தைக் காட்டும் கருவியாக அந்த முள் இருந்தது.