பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 40?

ஜெர்மனி நாட்டு விஞ்ஞானியான பீட்டர் ஹென்லின் என்பவர், கம்பிச் சுருள் சுருளால் சக்தி மூலம் இயங்கும் ஒரு புதுவகையான கடி காரத்தைக் கி.பி. 1500-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அந்தக் கடிகாரம் ஒரு பெரிய கம்பியால் மெதுவாக நகரும் முள் இணைப்போடும், சுருள் நிலையில் நீளமாக முறுக்கவிழ்க்கப் பட்டதோடும் அமைந்திருந்தது.

இதியிைல் கிறிஸ்டியன் છેઃ: ஹியூஜென்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி 1656-ஆம் ஆண்டில் முதன் முதலாக பெண்டுலம் என்ற ஊசற்குண்டின் அசைந்தாடும் பொறியோடு ஒரு கடிகாரத்தைக் கண்டு பிடித்தார். இத்தாலி விஞ்ஞானி கலீலியோ 1582-ஆம்ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டத் தோற்றத்தோடு அது இருந்தது. இந்தக் கடிகாரம் ஒரு நாள் காட்டும் மணிக் குறியிட்டில் - ஒரு நிமிட நேரம் குறைவாகக் காட்டியது.

கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் அந்தத் தவறைப் பத்து செகண்டுகளுக்குள் அடங்குமாறு திருத்தி அமைத்தார். இந்தக் கடிகாரத்தில் அவர் அமைத்திருந்த சக்கரம், கம்பிச்சுருள் இயக்கம் இன்றுள்ள எல்லாக் கடிகார அமைப்பிலும் இருப்பதை நாம் பார்க்கலாம். இதே நேரத்தில் இராபர்ட் ஹ9க் என்ற ஆங்கிலேய விஞ்ஞானி 1671-ஆம் ஆண்டில் அதிர்ச்சி வேகத்தோடு மணிப் பொறியில் சமநிலைப் பொறிக்கும், இயக்கும்; சக்திக்கும் இடையே தொடர்பு செய்து ஒழுங்குப்படுத்தும் அமைப்புடன் ஒரு கடிகாரத்தை அறிமுகப் படுத்தினார்.

ஜார்ஜ் கிரஹாம், ஜான் ஹாரிசன் என்பவர்கள் திறமைமிக்க வேலைப்பாடுகளுடன் ஒரு நாளைக்கு ஒரு விநாடி குறைவு என்ற கடிகார்க் குறையை நீக்கிச் சரியாக அமையுமாறு திருத்தி அமைத்தார்கள். சிக்மண்ட் ரிஃபலர், 1889-ஆம் ஆண்டில் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாத ஊசற்குண்டு, ஊசலாட்ட பெண்டுலம் அமைப்போடு, காலத்தைச் சரியாகக் கணக்கிடும் கடிகாரம் ஒன்றை அறிமுகப்படுத் தினார். அதற்குப் பிறகு ஆர்.ஜே. ரூட், டபிள்யூ எச். ஷார்ட் என்பவர்கள், சிக்மண்ட் ரீஃபலரைத் தொடர்ந்து திறமையான நுட்பங்களோடு அந்தக் கடிகார இயக்க நுட்பங்களைத் திருத்தி அமைத்தார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், கம்பி வளைய வட்டத்துக்குள் விட்டமான அமைப்புடன் சுருள் கம்பிக் கருவியோடு கூடிய கடிகாரங்கள் தென் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாயின. மற்றும் புதுப்புது வழிகள் கடிகாரக் கண்டுபிடிப்பு இயக்கத்தில்