பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

ஊடுருவின. 17-ஆம் நூற்றாண்டின் கடிகாரங்களில் நிமிடம், விநாடிகள் காட்டும் முட்களும் பொருத்தப்பட்டு ஓடின. 18-ஆம் நூற்றாண்டில் Bearings எனும் உராய்தலைத் தாங்கும் பொறியின் உறுப்புகள் பொருத்தப்பட்டு உபயோகமாயின.

பிரெஞ்சு, இத்தாலி நாடுகளில் வாழ்ந்த ஆதரவற்ற அகதிகள் எனப்படுவோர், ஜெனிவா, சுவிட்சர்லாந்து நாடுகளில் கடிகாரத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். 18-வது நூற்றாண்டில் சுவிட்சர் லாந்து நாடு கடிகாரத் தயாரிப்புத் தொழிலில் முன்னேற்றம் கண்டது.

ஹென்றி இ. வாரன் என்பவர், மின்சாரத்தால் இயங்கும் கடிகார வகைகளை 1900-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். 1920-ஆம் ஆண்டுகளில் க்வார்ட்ஸ் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன் பாட்டுக்கு வந்தன.

அந்தக் கடிகாரங்களின் செயல் நிறைவுகள், தற்காலத்து அணு இயக்கக் கடிகாரங்கள் உற்பத்தியைவிட சுமராகவே இருந்தது. பெர்டினாண்டு பெர்தெளடு என்ற சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு கடிகாரத் தயாரிப்பாளர்; பல நேர்த்தியான கடிகாரங்களைக் கற்பனை செய்துக் கண்டுபிடித்தார். ஏன் தெரியுமா? உலகக் கண்காட்சிகளில் காட்சிப் பொருளாக வைப்பதற்காகவே அவர் அவ்வாறான கற்பனைகளோடு அவற்றைச் செய்தார்.

பிரெஞ்சுக்காரர்களான ஆப்ரகாம், லூயிஸ் பிரெகுயிட் போன்ற புகழ் பெற்ற கடிகாரத் தயாரிப்பாளர்கள்; கண்டுபிடிப்பாளர்கள் அனைவரும்; எப்போதும் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு உரியவர் களாகவே வாழ்ந்துள்ளார்கள்.

வாழ்க்கையில் செல்வாக்குப் பெற்றவர்களுக்காகவும், உயர் குடியில் பிறந்தவர்களுக்காகவும், கப்பல் போக்குவரத்துப் பயணி களுக்காகவும் வானியல் வல்லதுநர்கள் பயன்களுக்காகவும் மட்டுமே அந்த அறிவியல் அறிஞர்கள் உயர்ந்த வகைக் கடிகாரங்களைக் கண்டுபிடித்து விற்பனைக்கு அனுப்பினார்கள்.

தாமஸ் தாம்பியன் என்பவர், ஓர் ஆங்கிலக் கடிகார விஞ்ஞானி. அவர் 1839-முதல் 1913-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். அவருடன் ராபர்ட் ஹ9க் என்பவரும் இணைந்து பணியாற்றிக் கடிகார ஒழுங்கமைப்பு உறுப்புகளுடன் கம்பிச் சுருள் அமைந்த வடிவில், முதன் முதலாகக் கடிகாரங்களை உருவாக்கினர்.

டானியல் க்வோரி என்ற ஆங்கில கடிகாரத் தயாரிப்பாளர்,

கடிகாரத்துள் மணி அடிக்கும் கருவியை இணைத்துத் தயாரித்தார். இதற்கு அலாரம் க்ளாக் என்று பெயர்.