பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 407

இதனால் தையல் மெஷின் போர் என்ற ஒரு போரே 1850-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பயங்கரமாகி நடந்தது.

மேற்கண்ட போராட்டம் 1854-ஆம் ஆண்டு வரை நீதிமன்ற வழக்காகத் தொடர்ந்து நீடித்ததால், ஜார்ஜ் பிலிஸ் என்ற நீதிபதி இலியாஸ் என்பவருக்குச் சாதகமாக ஒரு தீர்ப்பளித்தார்.

அதன்படி சிங்கர் தையல் மெஷின் சம்பந்தப்பட்ட எல்லா உரிமைகளையும்; அவர் இலியாசிடமிருந்து பெற்று கொண்டு, 15 ஆயிரம் டாலர் தொகையை நஷ்ட ஈடாக வழங்கினார். அதற்குப் பிறகே தையல் மெஷின்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பினார் சிங்கர்,

இவ்வாறு இலியாஸ், தனது தையல் மெஷின்களைத் தயாரித்து அனுப்பி விற்பனை செய்ததால், பத்து ஆண்டுகளுக்குள் அவர் பெரும் லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரனாகவும் ஆனார்.

இலியாஸ் தினசரி வருமானம் மட்டும் 4000 டாலராகப் பெருகியது. தனது சகோதரரையும் - மருமகனையும் தனது தொழில் உதவிக்காக வைத்துக் கொண்டு துவக்கப்பட்ட இலியாசின், தையல் மெஷின் கம்பெனி அமெரிக்க பிரிட்ஜ்போர்ட் நகரில் குறிப்பிடத்தக்க ஒரு வணிக நிறுவனமாக விளங்கியது.

எனவே, மாணவ மணிகளே இலியாஸ் முயற்சி வீண் போயிற்றா? என்று சிந்தனை செய்யுங்கள்; முயற்சியுடையார் எவ்வகையிலும் இகழ்ச்சி அடையார் என்பது உங்களுக்கும், எனக்கும் பாடமல்லவா?

'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது மட்டுமன்று எதைச் செய்தவற்கும் துணிவே துணை என்ற மனோபாவமும் தேவை என்பதைப் புரிந்து, நீங்களும் வெற்றி பெறப் போராடுங்கள்! நிச்சயமாக வாகை சூடுவீர்கள்!