பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானூர்தியில் பறந்திட வழிகாட்டிய விஞ்ஞானிகள்:

மாணவ - மணிகளே!

இயேசு நாதர் பிறப்பதற்கு முன்பே, அதாவது கி.மு. 300-ஆம் ஆண்டில், சீன நாட்டு இளைஞர்கள் வானத்தில் காற்றாடியை எப்படிப் பறக்க வைப்பது என்பதை ஆராய்ச்சி செய்து - காற்றாடி செய்வதைக் கண்டுபிடித்தார்கள்.

அந்தக் காற்றாடிக் கண்டுபிடிப்புதான். வானத்தில் மனிதனும் பறக்கலாம் என்ற மனோபாவத்தையூட்டும் மாதிரி வடிவமாகப் பின்னாளில் அமைந்தது. ஆனால் அது, ஆகாய விமானத்தில் பறப்பதற் கான இயந்திரம், பொறிகள் இல்லாத மாதிரி வடிவமாக இருந்தது.

பெரிய காற்றாடியாக அது இருந்ததால் அதில் இயந்திரப் பொறிகளைப் பொருத்தி; அல்லது பலூனில் காற்றை நிரப்பி வானத்தில் பறக்க விட்டார்கள் - மக்கள்.

காற்றில் மிதக்கும் காற்றாடியைச் சீனர்கள் கண்டுபிடித்த பிறகு, நூறாண்டு கழித்து, கிரேக்க நாட்டு அறிவியல் மேதை. கணித வித்தகர், விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் ஆர்க்கிமிடீஸ், ஒரு பொருள் தண்ணில் மிதப்பதற்குரிய விதிகளைக் கண்டுபிடித்தார்.

அந்த விதியைப் பின்பற்றி வானில் பறக்கப் பல முயற்சிகளை விஞ்ஞானிகளே செய்து பார்த்தார்கள். அவர்களுடைய உழைப்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது.

இத்தாலிய விஞ்ஞானியும், சிறந்த ஓவியருமான லியோ னார்டோ-டா-வின்சி என்பவர், கி.பி. 1500-ஆம் ஆண்டில் வானில் பறப்பதற்குரிய இயந்திரச் சக்தியோடும், ஆடி அசைகின்ற இறக்கைகளோடும் ஒரு பறக்கும் விமானம் படத்தை வரைந்தார். அதற்கு ஆர்னிதோப்லர்ஸ் என்று பெயரிடப்பட்டது.