பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லணை, பிரமிட் அறிவியல், - - కత్తిఫ్ఫ్ 参 & 義

இT மாணவர்கள் பாடமாக வேண்டும்!

மாணவ - மணிகளே!

தமிழ்நாட்டில் ஓடும் காவேரி நதி வரலாற்றுப் புகழ்பாடும் பொன்னி ஆறு கரிகாலன் அந்தக் காவிரியிலே கல்லணையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினான் என்பது வரலாறு.

அதன் பயனை, பெருமையை, வளம் வழங்கும் அதன் சோற்றுக் களஞ்சியக் கொடையைத் தமிழ் மக்கள் இன்றும் நேரில் கண்டும் கேட்டும் அனுபவிக்கின்றார்கள்.

அந்தக் கல்லணைக்கு ஈடாக இன்று எந்த B.E., M.E.,க்களாவது கட்ட முடியுமா? கரிகாலன் எந்தக் கல்லூரியிலே போய் என்ஜினியர் பட்டம் பெற்றான்? அதே போன்றதுதான் நைல்நதி பிரமிட்டுகள்!

சீனப் பெருஞ்சுவர்கள், நைல் நதி பிரமிட்டுகள், கலிலியோ கண்ட சாய்ந்த கோபுர விஞ்ஞானம், சிந்து சமவெளி மொகஞ்சதாரோ - ஹரப்பா நகர் அமைப்புப் பொறியியல் மாண்புகள், அசோகன் காலக் கல்வெட்டுகள் பல்லவர் காலத்து மாமல்லை, மலைக்கோட்டை, குடுமியான் மலை, சித்தன்ன வாசல்கள், திரிசூலம், அஜந்தா, எல்லோரா குடைவுகள் போன்றவற்றை, மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்புக் கல்விக் காலம் முடிவதற்குள் அரசு சார்பாக தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்களை அழைத்துக் கொண்டு போய் காட்டி அறிவூட்ட வேண்டும்.

அப்போதுதான் காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணையை போல வேறொன்று நிறுவிடும் பொறியியல் அறிவு பெற்றிட அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் வாய்க்கும்.

மாணவர்களே! நைல் நதி தீரத்துக்குக்கு சென்று பிரமிட்டுக்களைக் காண்கிறீர்களோ - இல்லையோ, இதோ பிரமிட்டுகள் புகழ்பாடும் வரலாற்றுக் குறிப்புகள். இதையாவது முடிந்தால் படிக்க முயற்சி செய்யுங்கள்