பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 447

ஆனால், அந்த பிரமிட்டைக் கண்டுகளிக்க இன்றும்கூட, சுற்றுலாவுக்கு வருகின்ற மக்கள், அதன் அழகுக்காகவும், உருவ வரை அமைப்பிற்காகவும், இப்படித்தான் அதைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தத் தொழில் வல்லுநரின் கைவினைத் திறனுக்காகவும் பாராட்டுகிறார்கள்.

எகிப்து நாட்டின் தலைநகரமான கெய்ரோ அருகில் உள்ள கிசா, என்ற இடத்தில் பாரோஸ் மன்னர்களான க்ஹ9ஃபூ, க்ஹஃரி, மென்கவ்ரி என்ற மூன்று மன்னர்களை அடக்கம் செய்த பெரிய பிரமிட்டுகள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

க்ஹ்ஃபூ என்ற பிரமிட், 27-வது நூற்றாண்டில் இயேசு கிறித்து பிறப்பதற்கு முன்பே, அது பெரும் புகழ் பெற்றிருந்தது.

அந்த பிரமிட் 3 லட்சம் கற்பாறைத் துண்டுகளால் தயாரானது. ஒரு கல் எடை என்ன தெரியுமா? இரண்டரை டன் ஆகும்.

ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு அடிமை மக்களின் கடின உழைப்பாலும், ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல் அவர்களது நீண்ட கால முரட்டுத்தண்மான வேலைகளாலும், இந்தப் பிரமிட் கட்டப்பட்டது.

இந்த பிரமிட்டிற்குள் சவத்தைப் புதைக்கும் சமாதிதான் - அதன் இதய பாகம் அமைப்பாகும். பிரமிட்டின் வெளிப்புறப் பக்கங்கள் லைம் ஸ்டோன் என்ற கற்களாலானது.

பண்டைய எகிப்து பொறியியல் நிபுணர்கள், திட்பநுட்பமான நெம்புகோல் சிகரக் கூர்மையுடன் - மரம், கல், உலோகம் போன்ற உருளைகளின் உதவியால் சாய்வு தளம் சரிவுக் கோணத்துடன் திட்டமிட்டு அந்த பிரமிட்டுக்களைக் கட்டியிருக்கிறார்கள்.

பிரமிட் கட்டுவதற்குத் தேவையான லைம் ஸ்டோன் வகைக் கற்கள், நைல் ஆற்றின் மேற்குக் கரையிலே மொக்கூடம் என்ற குகையிலிருந்து கொண்டு வரப்பட்டன.

கிரானைட் கற்கள் எகிப்து மேற்புரத்தில் உள்ள அஸ்வான் பகுதியிலே இருந்து எடுத்து வரப்பட்டன. அந்தக் கற்களை பாளம் பாளமாகத் துண்டு துண்டாக அறுக்க, வெண்கலம் ரம்பங்களிலே நவமணிக் கற்களைப் பொருத்தி அறுத்தார்கள்.

அறுக்கப்பட்ட துண்டுகளை, கல் பாளங்களை வண்டிகளில் ஏற்றி இறக்கவும், கொண்டு வரவும், போகவும், மேற்கூரையில் ஏற்ற உதவும்