பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

உத்தரங்களுக்குரிய வேலைகளுக்குச் சிறுசிறுத் தடுப்பு மரக் கட்டைகளையும் உலோக வகைகளாலான தடுப்பு இரும்புத் துண்டுகளையும், திம்சுகளையும் பயன்படுத்தினார்கள்.

எகிப்து நாட்டை பாரோஸ் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் வாழும்போது பிரமிட்டுகளைக் கட்டினார்கள். இறந்ததற்குப் பிறகும் தாங்கள் வாழப்போகும் வாழ்க்கைக்காகப் பிரமிட்டுக்களை அவர்கள் கட்டிக் கொண்டார்கள்.

எகிப்தியர்கள் இறந்ததற்குப் பிறகும் தங்களுக்கு ஒரு மறுவாழ்க்கை இருப்பதாக நம்பினார்கள். அதனால், அவர்கள் தங்களுடைய இறந்துபோன உடலுக்குத் தங்குமிடமாக பிரமிட்டுக்களை கருதினார்கள்.

பிரமிட்டு அறைகளில் தங்குபவர்களாக எண்ணப்படுவோர், அதாவது உயிரற்ற உடலுடையோர் மறு வாழ்க்கை வாழ்ந்திட உணவு, ஆயுதங்கள், மரவகை இருக்கைகள் மற்றும் தேவைப்படும் பொருட்களை, தங்களது மறுவாழ்க்கைக்காக முன்னேற்பாடுகளாகச் செய்து வைத்துக் கொள்வதாக எண்ணினார்கள்.

பண்டையக் காலத்திலிருந்து இக் காலம் வரை பிரமிட்ஸ் அறையில் பாரோவால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தங்கம், பொன், வெள்ளி, யானைத் தந்தம், நவமணிகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை அக்கம் பக்கத்தில் வாழும் கொள்ளைக்காரர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொள்ளைக்காரர்கள் பிரமிட் கருவறைகளை உடைத்துத் திறந்து உள்ளே நுழைந்து, அங்கே இருக்கும் விலை மதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்துப் பிரமிட்டினுடைய மதிப்பைக் கெடுக்கின்றார்கள்.

இருந்தாலும், 5000 ஆண்டு காலமாக இருந்து வரும் பிரமிட் புகழை யாராலும் கெடுக்க முடியாது என்பதை, ஆண்டுதோறும் பிரமிட்டைப் பார்த்து மகிழும் சுற்றுலா மக்களின் எண்ணிக்கையே ஒரு சான்றாக இன்றும் இருக்கின்றது.