பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்ணோக்காடி தந்தை லியூ வென்ஹாக் சாதனை: (Microscope)

மாணவ - மணிகளே!

ண்ணோக்காடியை நாம் பூதக் கண்ணாடி என்றும் கூறுகிறோம். இந்தக் கண்ணாடி மிகச் சிறிய, பொருட்களையும் மிகப் பெரிய உருவமாகக் காட்டிடும் திறன் பெற்றது.

நமது கண்களால் தெளிவாகப் பார்க்க முடியாத பாக்டீரியா போன்ற சிறுசிறு பொருட்களை - மிகப் பேருருவங்களாகப் பார்த்து, அவை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, விஞ்ஞானிகள் அந்த நுண்ணோக்காடிக் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.

பூதக் கண்ணாடியில் உள்ள உருவத்தைப் பெரியதாகக் காட்டும் கண்ணாடி, மிகச் சிறிய அளவு உருவம் தான். ஆனால், அது மதிப்பு மிக்க குவிந்த உரு வளைவான அமைப்புடையப் பொருள். அதனுடைய உருப் பெருக்கிக் காட்டும் சக்தி, ஒரு பொருளை மிகப் பெரியதாகவும், ஏறக்குறைய பத்து மடங்கு பெரிய உருவமாகவும் காட்டும் திறனைப் பெற்றது.

இந்த உருப் பெருக்கிக் காட்டும் கண்ணாடியைப் பண்டைய நாட்களில் ரோம் நாட்டு மக்கள் பயன் படுத்தினார்கள். அதற்குப் பிறகு இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளுக்கும் அது பயன்பட்டது.

பல கூறுகள் அடங்கிய இந்தக் கண்ணாடியின் திரள், நாளடை வில் வளர்ச்சிப் பெற்று உருக்களைப் பெரியதாகக் காட்டிடும் கண்ணாடி யாக 16-வது நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு படத்தை இந்தக் கருவி 2000 மடங்கு அளவாகப் பெரியதாக்கிக் காட்டிடும் கண்ணாடியாகும்.

ஒரு குழாய் வடிவ உருவத்தில் இரண்டும் அதற்கு மேலும் உள்ள நுண் கண்ணாடிகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் கண்ணாடி தெளிவாகவும், கூர்மை யாகவும், நேர்த்தியாகவும்,