பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 121

கண்ணாடிக் குழாய் வடிவத்தை தேவைக்கேற்ப நகர்த்தவும், கீழும் மேலும் சரி செய்து, ஒரு பொருளைப் பார்க்கவும், தெளிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச் சில் இருக்க வேண்டிய தூரத்தை இந்தக் குவி மையக் கண்ணாடி காட்டுகின்றது.

இந்த நுண்ணோக்காடியை முதன் முதலாக டச்சு நாட்டு விஞ்ஞானி லீயுவென்ஹாக் என்பவர் கண்டுபிடித்தார். அதனால் அவர் பூதக் கண்ணாடியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

இந்த நுண்ணோக்காடி, பொருள்மீது படியும் ஒளியால், அதன் உண்மையான தோற்றத்தைக் காட்டுகின்றது. அதே ஒளியால் நாம் அந்தப் பொருளைப் பார்க்கின்றோம்.

எனவே, அவற்றைச் சாதாரண ஒளியால் நாம் பார்க்க முடியாது. ஒளியைவிட நேர்த்தியான வேறு ஏதாவது ஒரு சக்தியை நாம் பயன்படுத்தினால்தான் அந்தப் பொருளின் உண்மைத் தோற்றத்தைத் தெளிவாகக் காண முடியும்.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் உதவியால் இதற்கு முடிவு கண்டுபிடிக்கப்பட்டது.

எலக்ட்ரான் மின்கதிர் மீது காந்தக் கல் ஒளி குவியும்போது, இருளில் அல்லது மின்காந்த அலை அதிர்வில் வண்ண ஒளிகாலுகின்ற திரை, அதாவது, தொலைக்காட்சியின் திரை போல எலக்ட்ரான்கள் அதை மோதும்போது பட உருவத்தைத் தெரிய வைக்கின்றது.

இந்த சிறந்த எலக்ட்ரான் நுண்ணோக்கிக் கண்ணாடி ஒரு பொருளை ஏறக்குறைய 5 லட்சம் மடங்காகப் பெரியதாக்கிக் காட்டும் சக்தி பெற்றதாக அமைந்துள்ளது. இதுதான் இரண்டாவது உலகப் போரின்போது கண்டுபிடிக்கப்பட்ட மைக்ரோஸ்கோப் கருவிக்குரிய சாதனையாகும்.