பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரஹாம் பெல் ஆய்வு : வழங்கிய தொலைபேசி: (Telephone)

மாணவ - மணிகளே!

கிரேக்க மொழியிலே இருந்து வந்த வார்த்தை டெலிபோன் என்ற சொல்.Tele- டெலி என்றால் தொலைவு. போன் - Phone என்றால் ஒலி. இந்த இரண்டும் சேர்ந்தே டெலிபோன் அல்லது தொலைபேசி என்ற கருவி ஆயிற்று.

19-வது நூற்றாண்டில் விஞ்ஞான வித்தகர்கள் பலர், மின்னாற்றல் மூலமாக இதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்த சார்லஸ் பேளர்செயல் என்பவர் அவர்களுள் ஒருவர்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன் பிலிப்ரெய்ஸ் என்பவர்,

1861-ஆம் ஆண்டில், ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒலியை ஊடுருவ வைக்கப் பல முன்மாதிரி உருவரைகளை வரைந்தார்.

அவருக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான எலிஷாகிரே, அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்ற இருவரும் தனிப்பட்ட முறையில் பல வகையான உருவ முன்மாதிரிப் படங்களை வரைந்தார்கள். 1870-ஆம் ஆண்டில் மின்னாற்றல் மூலமாக ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குப் பேச முடியும் என்ற வழியை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் 7.3.1876 -அன்று டெலிபோன் பயன்பாட்டிற்கான உதவியை அமெரிக்கா அரசு செய்து, அதைக் கண்டுபிடிக்குமாறு ஊக்கப் பரிசு வழங்கியது. உடனே அவர் பெல்' என்ற டெலிபோன் நிறுவனத்தை 1877-ஆம் ஆண்டில் நிறுவினார்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஓர் அமெரிக்க விஞ்ஞானி. அவர் 1847-ஆம் ஆண்டுக்கும் 1922க்கும் இடையில் வாழ்ந்த ஓர் அறிவியல்