பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 123

துறை மேதை. அவர்தான் டெலிபோன் என்ற தொலைபேசிக் கருவியைக் கண்டுபிடித்தார்.

அமெரிக்கா மாசாசூட்ஸ் மாநிலத்திலுள்ள போஸ்டன் பல்கலைக் கழகத்தில் 10.3.1876ஆம் ஆண்டில் உயிர் நூல் கற்பிக்கும் பேராசிரி யராகப் பெல் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் அவர் கண்டுபிடித்தக் கருவி ஒன்றின் மூலமாக, மிஸ்டர் வாட்சன் இங்கே வா; நான் உன்னைக் கான விரும்புகிறேன் என்று பேசிய குரல்தான் முதன் முதலாக டெலி போனில் - கிரஹாம் பெல் பேசிய - கேட்கப்பட்ட வார்த்தைகளாகும்.

இதற்குப் பிறகு 1993-ஆம் ஆண்டில் டெலிபோன் பயன்பாட்டில் ஒரு புதிய புரட்சி உருவானது. அதாவது ஒரு கைப்பிடி மூலமாக மேல் பாகத்தில் காதால் கேட்கவும், கீழ்பாகத்தில் வாயால் பேசவும் கூடிய ஒரு புது முறை கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டனை அழுத்திப் பேசும் மற்றொரு புதுமுறை 1960-ஆம் ஆண்டுகளில் உருவானது. நமக்குத் தேவையான எண்களைச் சுழற்றுவதற்குப் பதிலாக, பட்டணை அழுத்தி எண்களைப் பெறும் முறையாகும். தற்போதுள்ள மின்னாற்றால் சுழற்றும் முறை 1980-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பதிலளிக்கும் விஞ்ஞானக் கருவி முறை ஜப்பான் நாட்டில் 1985-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது துல்லியமான விவரங்களுடன் பேசும் கார்டு இல்லாத முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பட்டன் அழுத்தும் தொழில் நுட்ப வகையைச் சார்ந்தது. ஒரே கருவியில் வாய்பேசும் முறையும், காது கேட்கும் முறையும் அமைந்த முறை இது. அது அடிப்படை மூல அலகால் இணைக்கப்பட்டது. கம்பி ஒயரால் அல்ல; வானொலி முறையால் ஆகும். அது 100 மீட்டர் அளவுடைய தூரம் வரைப் பயன்படும்.

ஜப்பான் நாட்டில் கார்டு முறை அல்லாத தொலைபேசிகள் வாடகை முறையில் இருக்கின்றன. 1987-ஆம் ஆண்டு முதல் விலைக்குப் பெறக்கூடிய கார்டற்ற டெலிபோன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கார்டு, முறை அல்லாத, விரல் சார்ந்த புதியதொரு முறை 1995-ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டில் வெளி வந்துள்ளது.

இதுதான், தொலைபேசிக் கருவி அன்று முதல் இன்றுவரை வளர்ந்துள்ள விஞ்ஞான வளர்ச்சி முறை ஆகும்.