பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானி செர்விட்டஸ் உயிரோடு எரிக்கபட்டதேன்?

மாணவ - மணிகளே!

ஓவிய வித்தகர் லியோ டாவின்சி வரைந்த இருதய வடிவ ஒவியத்தைக் கண்டார் எசர்விட்டஸ் என்ற ஸ்பெயின் நாட்டு மருத்துவ விஞ்ஞானி. இவர் இதயத்தை ஆராய்ச்சி செய்தவர். ஆனால், இவர் விஞ்ஞானி அல்லர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த மத ஆய்வுப் பாதிரியார். மனித இதயத்தின் ஒரு பகுதியிலிருந்து நுரையீரல் வழியாகத்தான் ரத்தம் மறுபாகத்திற்குச் செல்கிறது. நுரையீரல்தான் காற்றுடன் கலந்து அது சிவப்பு நிறமாகின்றது; உயிர்ச் சத்தும் பெறுகின்றது என்று முதன் முதல் கூறியவர் செர்விட்டஸ். இதைத் தவிர வேறு எந்த தவறையும் இவர் செய்யவில்லை.

இந்தப் பாதிரியார் தான் செய்த ஆராய்ச்சியை அவர் எழுதிய "கிறித்துவம் மீட்கப்பட்டது" (Christanity Restored) என்ற புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருந்தார்.

இந்த மதகுருவுக்கு முன்பு கேலன் என்ற ஒரு உடற்கூறு விஞ்ஞான ஆராய்ச்சியாளர் இருந்தார். அவர் "இதயத்தின் ரத்தக் குழாயில் காற்று இல்லை. ரத்தம் மட்டும்தான் இருக்கிறது. இதயத்தின் வலது பக்கத் திலிருந்து சிறு துவாரங்கள் மூலம் இதயத்தின் இடது பக்கத்திற்கு ரத்தம் பாய்ந்து, அது அங்கு காற்றுடன் கலந்து உயிர்ச் சக்தி பெறுகின்றது" என்று கண்டுபிடித்தார். தனது நூலிலும் அதை செர்விட்டஸ் எழுதியிருந்தார்.

மதகுரு செர்விட்டஸ், கேலன ஆராயசசியைத தவறு என்றார். இந்த மேதைகள் இருவரின் கருத்தும் அப்போதைய விஞ்ஞானி களிடையே விவாத சர்ச்சைகளை உருவாக்கி விட்டது.

இதில் என்ன சிறப்பு என்றால், கேலன் என்ற விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் எந்த இடத்திலும் "துரையீரல்" என்ற பொருளைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்பதுதான்.