பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் பணம் மட்டுமே சகலவிதமான நன்மைகளையும் வழங்கும் என்று நம்புவதற்கில்லை.

மனித உரிமைகளோடு மனிதன் வாழ விரும்புவது இயற்கை. அதற்கு சிறுவயது முதலே பயிற்சி பெற வேண்டும்.

பல சூழ்நிலைகளில் உரிமைகளைப் புதிதாகப் பெறவோ - அல்லது தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவோ மனிதன் முயன்று வர நூலறிவும் தேவை.

இதற்கான வரலாற்றுச் சான்றுகள்கூட இருக்கின்றன. மனித உரிமைகளுக்காக, மக்களால் நடத்தப்படும் போராட்டங்கள் வாயிலாக, உறுதியான வெற்றி கிடைப்பது சந்தேகம்தான். வெற்றியே கிடைத்துவிடும் என்று நம்புவதற்கு இல்லையே!

வேலை செய்யும் உரிமை பணிகளுக்கு ஏற்ற ஊதியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால், இவை எல்லாம் இன்று கொள்கை அளவில்தான் பெறப்படுகின்றனவாக உள்ளன.

எனவே, தான் ஆசைப்படாத ஒன்றில் மனிதன் பற்று இல்லாமல் இருக்கும் உரிமை - அவனுக்கு உறுதியோடு இருந்தாக வேண்டும்.

மாணவன் ஒருவனிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமை, அறிவு, ஆற்றல், சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. அதற்குப் பதிலாக, மண்டைகளில் கரடுமுரடான, செய்திகளைத் திணிப்பது அல்ல கல்வி.

குழந்தைகள் படிக்க ஆசைப்படுவதையே மாணவர்களுக்குக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வயது முதிர்ச்சி அடைந்தவர்களது ஞானத்தை எல்லாம் கற்பிக்க முயல்வது கூடாது.

இப்படியே செய்தால் அதே மாணவர்களிடம் படிக்க வேண்டும் என்ற இயல்பான ஊக்கம், ஆர்வம் எல்லாம் பாழ்ப்பட்டு போகும் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.

கல்விமீது ஆர்வம் எழுவதற்குப் பதிலாக, வெறுப்பை அவர்களது சிந்தனையிலே விதைக்கக் கூடாது. எதனையும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம், ஊக்கம் மாணவர்களுக்கும் உருவாக வேண்டும். அதை மாணவர்கள் உருக்குலைத்துக் கொள்ளக் கூடாது.

மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பயன்படும் செய்திகளை எல்லாம் - பள்ளியிலேயே கற்றுக்கொடுக்கும் கட்டாய நிலையைக் கல்விமுறை கைவிட வேண்டும்.