பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம் பூமியின் மேற்பரப்பு உருண்டிையா? தட்டையா என்பதை மனிதன் பூமிக்கு வெளியே சென்று பார்த்து வரம்பு கட்ட வேண்டியதில்லை. தினசரி சம்பவங்களினால் இந்த உண்மையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

எனவே, உலகம் தட்டையானது என்று கி.மு. காலத்தில் வாழ்ந்த கிரேக்க ஜியோமெண்டரி கணிதமேதை யூரிபிடீஸ் கூறியதை அய்ன்ஸ்டின் மறுத்தார்; தவறு என்றார்; உலகம் உருண்டையானதோர் எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது என்று நிரூபித்துக் காட்டிய சகலகலா வல்லவர் அய்ன்ஸ்டின்.

ஜெர்மனி நாட்டில் யூதரினத்தில் 'அல்ம் என்ற நகரில் 1879-ஆம் ஆண்டு பிறந்த மாமேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டின், 1955-ஆம் ஆண்டில் தனது 76-வது வயதில் இறந்தார். . ---

அய்ன்ஸ்டின் பிறந்தது ஜெர்மனி நாடு; இறந்தது அமெரிக்கா. விஞ்ஞான உலகச் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்தத் தாய்நாட்டைத் தூக்கி எறிந்து விட்டார். அறிவியல் பெருமையை அவனியிலே நிலைநாட்டி மாண்ட விஞ்ஞான விடுதலை வீரர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின்:

மாணவ - மணிகளே! அறிவியல் வித்ககராக அற்புதங்கள் பல ஆற்றிய ஆல்பர்ட் அய்ன்ஸ்டினைப் போல நீங்களும் வாழ்வீர்களா!