பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 3

சர். ஐசக் நியூட்டன், "பிரின்சிபியா” என்ற உலகப் புகழ் பெற்ற நூலை இலத்தீன் மொழியில் 1687-ஆம் ஆண்டு எழுதினார். "INVERSE SQUARE LAW என்ற அந்த புவியீர்ப்புச் சக்தியின் விஞ்ஞான விளைவுகளைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் எழுதினார். இந்த நூல் விஞ்ஞான உலகத்தில் அவருக்கு மிகப் பெரும் சாதனைகளை, புகழை விளைவித்தது.

சூரிய ஒளியைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகளை நியூட்டன் செய்தார். அந்த ஒளி, வானவில் தோற்றத்தைப் போல பல வண்ணங்களில் காட்சி தருவதையும் ஆராய்ந்தார். ஸ்பெக்ட்ரம் (Spectrum) என்ற அதன் பின்காட்சித் தோற்றம், உருவெளி வடிவம், வண்ண நிழல்வரி உரு, சூரியக் கதிர் வண்ணப்பட்டைத் தோற்றங்களை யெல்லாம் விளக்கி அதில் எழுதினார்.

நியூட்டன் டெலஸ்கோப்' என்ற தொலை நோக்காடியை அதாவது, தொலை தூரத்திலுள்ள சிறு பொருளை அருகாமையில் காட்டும் கண்ணாடி விஞ்ஞானத்தை ஆராய்ந்துக் கண்டார்.

பைனோமியல் தீரம் (Binomial Theorem) எனப்படும் ஈருறுப்புத் தொடர்ச்சியின் மதிப்புணர்த்தும் விதிமுறைகளையும், கால்குலஸ் (Calculus) என்ற நுண்கணித முறையையும், அதன் பயன்பாடுகளையும் நியூட்டன் கண்டறிந்தார். -

ஐசக் நியூட்டன் ஆற்றிய இத்தகையை அரும் சாதனைகளைப் பாராட்டி, இலண்டன் இராயல் சொசைட்டி அவரை 1672-ஆம் ஆண்டில் அதன் தலைவராகத் தேர்வு செய்தது. 1703-ம் ஆண்டிலும் அவர் மீண்டும் அதன் தலைவரானார்.

உலக விஞ்ஞானத் துறைகளுக்கு ஐசக் நியூட்டன் செய்த சேவைகளைப் பாராட்டி 1705-ம் ஆண்டில் அவருக்கு ‘சர்’ என்ற விருதுவை இராயல் விஞ்ஞானக் கழக அமைப்பு வழங்கிப் போற்றியது. சாதாரண ஐசக் நியூட்டன், உலக விஞ்ஞானப் பேரவையால் சர் ஐசக் நியூட்டன் என்று மதிக்கப்பட்டு அதன் பாராட்டையும் பெற்றார்.

உலக அறிவியல் துறைக்கு எண்ணற்ற அரிய கண்டுபிடிப்புச் சாதனைக் கொடைகளை வழங்கிய சர் ஐசக் நியூட்டன் என்ற அந்த விஞ்ஞான மேதை, 1727ம் ஆண்டில் மறைந்தார். அவரது உடல் இலண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே என்ற கல்லறை மாளிகையில் அடக்கம் செய்யப்பட்டது.

கல்வித் திறம் தரம் தகுதி ஆகியவற்றில் தரக்குறைவாக உள்ள மாணவ மணிகள் முயற்சி செய்தால், தொடர்ந்து அரும்பாடுபட்டால், அறிவாய்வின் உழைப்புத் தகுதிகளால், சர். ஐசக் நியூட்டனைப் போல புகழ்க் கொடியை உலகில் பறக்க விடலாம் அல்லவா? மாணவ மணிகளே சிந்தித்துப் பாருங்கள்! 撥